ராமலிங்கம் கொலை வழக்கு: கைதான 10 பேர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான 10 பேர் பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

தஞ்சை மாவட்டம், திருவிடை மருதூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முகமது அசாருதீன், முகமது ரியாஸ், நிஜாம் அலி, ஷர்புதீன், உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீது விசாரணை நடைபெற்றது. திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 10 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 20ம் தேதி பூவிருந்தவல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து நீதிபதி செந்தூர் பாண்டி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி 20 ஆம் தேதி மீண்டும் 10 பேரை ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் திருச்சி சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டனர்.

Exit mobile version