பாகிஸ்தானை உளவு பார்த்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு தடை விதித்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.
பாகிஸ்தானை உளவு பார்த்ததாக கடந்த 2016ம் ஆண்டு இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு குல்பூசண் ஜாதவிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்தியா சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை ஏற்றுக்கொண்ட 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு குல்பூஷண் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணை வருகிறது. இன்று தொடங்கி வரும் 21ம் தேதிவரை நடைபெறவுள்ள விசாரணையில், இந்தியா சார்பில் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதிடவுள்ளார்.
Discussion about this post