பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் KTM நிறுவனம் புதிய 790 Duke பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது
KTM Duke வரிசை பைக் மாடல்களுக்கு இந்தியாவில் பெரிய அளவிலான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் Duke வரிசையில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக 790 Duke பைக்கை KTM நிறுவனம் களமிறக்கி உள்ளது.
இந்தியாவில் KTM நிறுவனம் அறிமுகம் செய்யும் சக்திவாய்ந்த பைக் மாடல் என்பதுடன், முதல் இரட்டை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட முதல் பைக் மாடல் 790 Dukeஎன்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பைக் முதலில் 10 பெருநகரங்களில் உள்ள குறிப்பிட்ட டீலர்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. வரும் ஏப்ரலில் மாதம் முதல் 30 நகரங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது .
புதிய KTM 790 Duke பைக் ரூ. 8.63 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
Discussion about this post