கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் வலுவிழந்த 7 பிரதான அணை மதகுகளை மாற்றியமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி கேஆர்பி அணை கட்டி முடிக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி அணையின் பிரதான முதல் மதகு உடைந்தது. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதியன்று ரூ. 3 கோடி மதிப்பில் உடைந்த மதகிற்கு பதிலாக ஒரு புதிய மதகு பொருத்தப்பட்டது.ஆனால் அணையில் உள்ள மற்ற 7 மதகுகளும் இதே போன்று சேதமாகி இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்ததால், அணையின் பாதுகாப்பு கருதி 52 அடி உயரம் கொண்ட அணையில் அன்று முதல் 42 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் அணைக்கு வரக்கூடிய அதிகப்படியான உபரிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனையடுத்து விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசு சார்பில் ரூபாய் 19 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பில், வலுவிழந்த 7 பிரதான அணை மதகுகளில் ஒவ்வென்றாக வெல்டிங் வைத்து வெட்டி எடுக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் இப்பணிகள் முடிவு பெற்று, பிப்ரவரி மாதம் புதிய மதகு பொருத்தும் பணிகள் நடைபெறவுள்ளது
Discussion about this post