பனிச்சரிவில் சிக்கி பலி: தமிழக ராணுவ வீரரின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்

அருணாசலப் பிரதேசத்தில் பனி சரிவில் சிக்கி உயிரிழந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் 42 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூர் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ், அருணாச்சல பிரதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ஒரு முகாமில் இருந்து வாகனம் மூலம் வேறு இடத்திற்கு ராணுவ வீரர்கள் சென்ற போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. பனி சரிவில் சிக்கி 8 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் சந்தோஷின் உடல் விமானம் மூலம் பெங்களூருவிற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அவரது சொந்த ஊரான கும்மனூருக்கு எடுத்து வரப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரபாகர், மறைந்த ராணுவ வீரர் சந்தோஷிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர், ராணுவ வீரர் சந்தோஷின் உடல் 42 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Exit mobile version