கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரிய கூட்டம், ஐதராபாத்தில் இன்று நடைபெறுகிறது.
சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் திறந்துவிடப்படுகிறது. ஏற்கனவே இரு மாநில அரசுகளும் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, ஆண்டுக்கு 15 டி.எம்.சி. தண்ணீர் சென்னைக்கு திறந்து விடப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. சென்னைக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை உரிய முறையில் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்த நிலையில் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டில் தொடர்புடைய மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் அடங்கிய, கிருஷ்ணா நீர் மேலாண்மை வாரியத்தின் ஆலோசனை கூட்டம் ஐதராபாத்தில் இன்று நடைபெறுகிறது. மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், சம்பந்தப்பட்ட 4 மாநில அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் சென்னைக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post