கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு கைத்தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் கிருஷ்ண தரிசனம் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 14 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த கண்காட்சி வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் கிருஷ்ணரின் திரு உருவம் கொண்ட பஞ்சலோகம், பித்தளை, சந்தனமரம், கருப்பு மற்றும் வெள்ளை உலோக சிலைகள், தஞ்சை ஓவியங்கள், களிமண் பொம்மைகள், மார்பிள் சிலைகள், துணி பொம்மைகள், பட்டுத்துணியில் வரைந்த ஓவியங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ண தரிசனம் கண்காட்சியில் அதிக அளவில் இடம்பெற்றுள்ள கிருஷ்ணர் சிலைகளை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இதேபோல், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வண்ணவண்ண கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. சென்னை திருவொற்றியூர் இந்திராநகர் பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த சிலை வடிவமைப்பாளர்கள் பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கி, கடவுள் சிலைகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இந்த சிலைகள் வெள்ளை சிமெண்ட் மற்றும் நார் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது. 100 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய்வரை விற்பனை செய்யப்படும், இந்த சிலைகளை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
Discussion about this post