கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்ச்சியின்போது பேசிய ஜெயகிருஷ்ணன்,மெகா மின் உற்பத்தி களமாக மாறிவரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அடுத்ததாக 3 மற்றும் 4 அணுஉலைகள் நிருவப்பட்டு வருவதாக தெரிவித்தார். கூடங்குளத்தில் உள்ள முதல் அணு உலையில் இருந்து 21 ஆயிரத்து 131 மில்லியன் மின் உற்பத்தியும், இரண்டாவது அணு உலையில் இருந்து 6 ஆயிரத்து 803 மில்லியன் யூனிட் மின்உற்பத்தியும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மின் உற்பத்தி தவிர சமூக மேம்பாட்டு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்த ஜெயகிருஷ்ணன், கல்வி மற்றும் சுகாதாரப்பணிகளுக்காக 5 புள்ளி 2 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post