சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் போலி நகைகளை மாற்றி தங்க நகைகள் வாங்க முயற்சித்த இருவரைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாரிமுனை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் நகைக்கடைக்கு வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த இரு நபர்கள் தங்களிடம் உள்ள பழைய நகைகளை கொடுத்து விட்டு, புதிய நகைகளை வாங்க வந்திருப்பதாக தெரிவித்தனர். அவர்களிடம் இருந்த நகைகளை பரிசோதித்ததில் அவை போலியென்பது தெரிய வரவே, சுதாரித்துக் கொண்ட கடை ஊழியர்கள் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post