13-வது ஐ.பி.எல். போட்டிகள் துபாய், அபூதாபி, சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுப்போட்டிகள் பரபரப்பாக நடந்துக்கொண்டிருக்கின்ற நிலையில், இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் மோதின.
முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சப்மன் கில், சுனில் நரேன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.நான்கு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்களை சேர்ந்த இந்த இணையை, நான்காவது ஓவரின் 5 வது பந்தில் உனாட் கட் பிரித்தார். அவர் வீசிய பந்து ஸ்டேம்பை பதம் பார்க்க, நடையைக்கட்டினார் சுனில் நரேன்.
சப்மன் கில்லுடன் நிதிஷ் ராணா கைகோர்க்க ஆட்டம் வேகமெடுத்தது. இருப்பினும், ராணாவால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ராகுல் திவாடியாவின் பந்தில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் ராணா. 10ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 82 ரன்களை மட்டுமே சேர்ந்திருந்தது கொல்கத்தா.அடுத்தடுத்த ஓவரிலே சப்மன் கில், தினேஷ் கார்த்திக், ரஸல் களத்திலிருந்து வெளியேற 15 ஓவரில் 120-5 என்ற நிலையை எட்டியிருந்தது கொல்கத்தா.
பெட் கம்மின்ஸ் – மோர்கன் இணை அணிக்கான ரன்களை உயர்த்தவேண்டிய கட்டாயத்தில் இருந்தன. இதில் மோர்கன் 2 சிக்ஸ்களுடன் அதிரடி காட்ட, பெட் கம்மின்ஸ் 10 ரன்களிலே வந்த வேகத்தில் வெளியேறினார். ஒருவழியாக 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை சேர்ந்திருந்தது கொல்கத்தா. ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளையும், அன்கிட் ராஜ்புட், ஜெய்தேவ் உனாகட், டாம் கரண், திவாட்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Discussion about this post