ஜில் ஜில் climate -ல் கோலி-அனுஷ்கா : வைரலாகும் புகைப்படம்

2019 ஆம் ஆண்டு முடிந்து 2020 ஆம் ஆண்டு தொடங்க இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் வெளிநாடுகளுக்கு சென்று நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.அந்த வகையில் ஆண்ட்ரியா,மாளவிகா மோகனன், காஜல் அகர்வால், லக்‌ஷ்மி ராய் ஆகியவர்கள் தங்களின் vacation time புகைப்படத்தினை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் பிரபல காதல் ஜோடியான கோலி, அனுஷ்கா ஷர்மா ஸ்விட்சர்லேந்து சென்றுள்ளனர்.அங்கு மலைப்பகுதியில் பனி படர்ந்த இடத்தில் நின்றுக்கொண்டு இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ‘hello friends’ என கூறி அனுஷ்கா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட இந்த புகைப்படத்தில் பாலிவுட் நடிகரான வருண் தவான் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version