கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயன், மனோஜ் ஆகியோரை விடுவிக்க கோரிய மனுவை, உதகை முதன்மை குற்றவியல் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சயன், மனோஜ் உட்பட 10 பேர், உதகை முதன்மை குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 10 பேரையும் வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது என்று வாதிட்டார். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து விசாரணையை 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.