மெக்ஸிகோவில் முள்ளங்கி மற்றும் கிழங்குகளில் சிற்பங்களை வடிவமைத்து கொண்டாடும் “நைட் ஆஃப் தி ரேடிஷ்” எனும் பாரம்பரிய திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஓக்ஸாக்காவில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளைக் கொண்டு பல்வேறு உருவங்களை வடிவமைத்து இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர். இதில் அமைக்கப்பட்டிருந்த விநோதமான முள்ளங்கி சிற்பங்களை ஏராளமானோர் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Discussion about this post