வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான 2வது சந்திப்பு ஹனோய் நகரில் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், வட கொரிய அதிபர் கின் ஜாங் உன்னும் சந்தித்து பேசினர். வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பிற்கு பிறகு வட கொரியா, அமெரிக்கா இடையேயான உறவு சீராக இருந்தாலும் வட கொரியா மீதான பொருளாதார தடையை நீக்குவதில் அமெரிக்கா தயக்கம் காட்டுகிறது.
இந்தநிலையில் வட கொரியா அதிபருடனான 2வது சந்திப்பு வரும் 27, 28ஆம் தேதிகளில் வியட்நாம் நாட்டின் ஹனோய் நகரில் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த முறை நடைபெற்ற சந்திப்பின்போது அணு ஆயுதங்களை கைவிட வட கொரிய அரசு ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post