மேட்டுப்பாளையத்தில் பாக்கு மரத்தை முறித்த காட்டுயானை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள நெல்லித்துறை வனப்பகுதியிலிருந்து, காட்டு யானை ஒன்று அருகிலுள்ள பாக்கு தோட்டத்திற்குள் நுழைந்துள்ளது. பாக்கு மரத்தின் குருத்தை உண்பதற்காக மரத்தை அந்த காட்டு யானை முறித்தாக தெரிகிறது.
அப்போது மேலே சென்று கொண்டிருந்த உயர்அழுத்த மின்கம்பத்தின் மீது பாக்குமரம் சாய்ந்ததால் மின்சாரம் பாய்ந்து யானை பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post