மூணாறு அருகே குடும்ப தகராறு காரணமாக, மனைவியை கொலை செய்ய வந்தவர், அடி உதை பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷிஜூ என்பவருக்கும், அவரது மனைவி ஷீஜாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ஷீஜா, கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, ராஜக்காடு பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஷிஜூ, மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு,அவரது வீட்டிற்கு வந்து, ஷீஜாவை கத்தியால் குத்திவிட்டு, தப்பி ஓட முயற்சித்துள்ளார். ஷீஜாவின் அலரல் சத்தம் கேட்டு வந்த ஷீஜாவின் பெற்றோர், அவரை காப்பாற்றியதுடன், ஷிஜூவை பிடித்து சரமாரியாக அடித்து, உதைத்துள்ளனர். இதனால், பலத்த காயம் அடைந்த ஷிஜூ, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Discussion about this post