பெண்களை மிகவும் கீழ்த்தரமாக பேசிய திமுக பேச்சாளருக்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தென் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் திமுக பேச்சாளர் ஒருவர் பேசிய வீடியோ வைரலாக பரவியது. அவருடைய பேச்சுக்கள் அனைத்தும் மிகவும் கீழ்தரமானவையாக இருந்தது. இந்த வீடியோ தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக பேச்சாளரின் வீட்டுப் பெண்கள் இதுபோன்ற வார்த்தைகளை கண்டிப்பாக கேட்க விரும்ப மாட்டார்கள் என்று பதிவிட்டுள்ள குஷ்பு, திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.