இந்தியாவில் தொடர்ந்து தனி நாடு கோரி வரும் காலிஸ்தான் அமைப்பினர் லண்டனில் இந்திய தூதரகத்தின் முன்பு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் நடத்திய புல்வாமா வெடிகுண்டு தாக்குதலை கண்டித்து லண்டனின் பல்வேறு பகுதியிலும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இந்தியர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பஞ்சாப்பில் ஒரு பகுதியான காலிஸ்தானை தனிநாடாக கோரும் ஆதரவாளர்கள் இந்திய தூதரகம் முன்பு ஒன்று கூடி இந்தியாவில் சிறுபான்மையினருக்கான தாக்குதல் அதிகரிப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இந்திய அரசிற்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியர் சிலர் கண்டனம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த காலிஸ்தான் அமைப்பினர் இந்தியர்களை தாக்கிய காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஸ்காட்லாண்டு போலீசார் இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து செய்துள்ளனர்.
இந்திய தூதரகத்தின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post