முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் இடையே உன்னதமான உறவுப் பாலத்தை அமைக்கப் பாடுபட்டு வருகிறார் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கேரளா-தமிழ்நாடு கலாச்சார மாற்றுத் திருவிழா, சென்னையில் உள்ள மெட்ராஸ் கேரள சமாஜத்தில் தொடங்கி நடைபெற்றது. இதில், தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், கேரள சட்டம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஏ.கே.பாலன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், கேரளாவில் இருந்து வந்து, தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவரும் டாக்டர் சாரதா, வசந்தா, பின்னணி பாடகர்கள் சித்ரா, உன்னிமேனன் உள்ளிட்டவர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், இது போன்ற கலாச்சார நிகழ்வுகள் மூலம், ஒரு மாநிலத்தின் கலாச்சாரத்தை மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அறிந்து கொள்ள முடிகிறது என்றார். மேலும், தமிழகம்-கேரளம் இடையில் ஒரு உன்னதமான உறவுப் பாலத்தை அமைப்பவராக தமிழக முதலமைச்சர் ஒரு பாலமாக செயல்படுகிறார் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post