கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவி திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சீனாவின் உஹான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கேரள மாணவி சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, கேரளாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 53 பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஐதராபாத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Discussion about this post