திருப்பூர் அருகே கேரளாவில் இருந்து இறைச்சிக்கழிவுகள் கொண்டு வந்த வாகனங்களை சிறைப்பிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை அடுத்துள்ள கணபதிபாளையம் பிரிவு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு உள்ளது. அதில், அனுமதியின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சி கழிவுகளை, இயந்திரம் மூலம் அரைத்து பவுடர் செய்து, ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வீசும் துர்நாற்றத்தால் மூச்சு திணறல் ஏற்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுவதாக பொதுமக்களும் விவசாயிகளும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் கொண்டு வந்த 2 வாகனங்களை சிறைப்பிடித்த விவசாயிகள், உடுமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சட்டவிரோதமாக செய்யப்படும் இச்செயலை உடனடியாக நிறுத்தவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post