கஜா புயல் நிவாரண நிதிக்காக கேரள அரசு 10 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.
கஜா புயல் பாதிப்புக்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் நிதியளித்து வருகின்றனர். இந்த நிலையில், கேரள அரசு கஜா புயல் நிவாரண நிதிக்கு 10 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன், தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழகத்துக்கு 10 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக பதிவிட்டுள்ளார். மேலும், புயலால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தமிழக மக்களுக்கு கேரள அரசு துணை நிற்கும் என்றும் பிணராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழகத்துக்கு 10 கோடி நிவாரணம் அறிவித்துள்ள கேரள முதலமைச்சர் பிணராயி விஜயனுக்கு, நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.