சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து ஆதரவும்,எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது.
அண்மையில் சபரிமலையில் நடை திறக்கப்பட்டதும் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
மேலும், பெண் காவலர்கள் அங்கு பணியாற்றவும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், எந்த அரசியல் கட்சிகளுக்கும் பின்னால் தேவசம் போர்டு செல்லவில்லை என்றும் சபரிமலை விவகாரத்தில் சமரசத்துக்கு தயாராக இருப்பதாகவும்,தேவசம் போர்டு தெரிவித்தது.
இந்நிலையில், சபரிமலை விவகாரத்தில் எந்த வித முடிவும் எடுக்கலாம் என தேவசம் போர்டுக்கு கேரள அரசு முழு அனுமதி அளித்துள்ளது.
Discussion about this post