தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளநிலையில், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால், கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 187 ஆக உயர்ந்துள்ளது. மழை வெள்ளத்தால் சுமார் ஒரு லட்சம் பேர், வீடுகளை இழந்து, ஆயிரத்து 750 தற்காலிக வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகள் மற்றும் இதர தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. 10 கம்பெனி ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post