பின்லாந்தில் நடைபெற்ற 55-வது ஆர்டிக் லேப்லேண்ட் கார் பந்தயத்தில், பார்முலா ஒன் கார் பந்தய வீரர் 9-வது இடத்தை பிடித்துள்ளார்.
135 கார்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், பனி படர்ந்த சாலையில் 201 கிலோ மீட்டர் தூரம் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் பார்முலா ஒன் கார் பந்தய வீரர் வால்டெரி போட்டாஸ், 9-வது இடத்தைப் பிடித்தார். போட்டிக்கு பின்பு பேசிய வால்டெரி போட்டாஸ், இந்த போட்டி தனக்கு மிகுந்த சவாலாகவும், மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் இருந்ததாகவும் தெரிவித்தார்.மேலும் இந்த பாதைகளில் 200 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கும் போது, வளைவுகளில் திருப்புவதுதான் மிகுந்த சவாலாக இருந்ததாகவும் அவர் கூறினார். இந்த போட்டியில் பின்லாந்து நாட்டை சேர்ந்த கல்லி ரோவன்பெரா முதல் இடத்தை தட்டி சென்றார்.
Discussion about this post