தொடர் மழை மற்றும் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலை மாவட்டங்களில் நிலச்சரிவுகள் அதிகளவு ஏற்படுகிறது. இதனால் அங்கிருந்து மக்களை வெளியேற்றும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கொச்சி விமானநிலையத்தில் வெள்ளம் வடியாததால், வரும் 26ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க நேற்று முதல் 23 ஹெலிகாப்டர்களும், 200 படகுகளும் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உள்ளூர் மீனவர்களும் தங்கள் படகுகளுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட சுமார் 2 லட்சம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post