சின்னதம்பி யானையை பிடித்து, முகாமில் வைத்து பராமரிப்பதை தவிர வேறு வழியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சின்னதம்பி யானையை கும்கி ஆக மாற்ற தடை கோரிய வழக்கும், யானையை பிடித்து முகாமில் அடைக்க கோரிய வழக்கும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் பிரசாந்த், சின்னதம்பி யானையை இதுவரை 2 முறை வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டும், மீண்டும் அது ஊருக்குள் வந்துள்ளதாக தெரிவித்தார்.
விவசாய பொருட்களை தின்று பழகிய யானை எத்தனை முறை வனப்பகுதிக்குள் விட்டாலும், அது திரும்ப விவசாய பகுதிக்கு வரும் எனவும் கூறினார். எனவே, சின்னதம்பி யானையை முகாமில் வைத்து பழக்கப்பட்ட உணவுகளை கொடுத்து பராமரிப்பதை தவிர வேறு வழியில்லை என வனத்துறை சார்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post