ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற தற்கொலை படைத் தாக்குதலில், 40 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவி வரும் நிலையில் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜம்முகாஷ்மீர் மாநிலம்,பாரமுல்லாவில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு இந்திய ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த அப்பகுதி இளைஞர்கள், இது நாட்டுக்கு பணியாற்றுவதற்கு தங்களுக்கு கிடைத்த வாய்ப்பு என்றும், இந்திய ராணுவத்தில் சேர காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post