காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, அங்கு நிலவும் சூழல் குறித்து, ஆளுநர் சத்யபால் மாலிக் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுநரின் ஆலோசகர்கள் கே. விஜயகுமார், கே.கே. ஷர்மா, கே.ஸ்கந்தன், பரூக் கான் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாநில சட்டம், ஒழுங்கு நிலவரம், மக்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை சேவைகளை தடையின்றி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டம் 370 மற்றும் 35-ஏ ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து, அங்கு அசாதாரண சூழல் நிலவி வருவதால், இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
Discussion about this post