கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தன் பக்கம் இருக்கிறார்கள் -மு.க. அழகிரி

மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய அழகிரி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். கட்சி தொடர்பான தனது ஆதங்கத்தை  தந்தையிடம் முறையிட்டதாக அவர் குறிப்பிட்டார். திமுக செயற்குழு கூட்டம் பற்றி தெரியாது என்றும் அழகிரி  கூறினார். திமுகவின் உண்மையான தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக தெரிவித்த அழகிரி, அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும் என்று கூறினார். அழகிரியின் இந்தக் கருத்து, திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை நடைபெறும் அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இது எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.  
 
Exit mobile version