அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 10ம் தேதி விமர்சையாக கொண்டாடப்படவுள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொங்கியது. வரும் 10ம் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
தீப தரிசனத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கிரிவலப்பாதையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைள் குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
Discussion about this post