கார்த்திகை தீப திருவிழாவுக்கான ஏற்பாடுகள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக அறியப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்காக வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரகணக்கானோர் வருகை தருவார்கள். இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா வரும் நவம்பர் 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
இதற்கான பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. கார்த்திகை தீபத்தின் போது சாமி வீதி உலா வரும் வாகனங்களை பழுது பார்க்கும் பணிகள், கோயிலை சுத்தப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
மேலும் 9 கோபுரங்கள் மற்றும் மதில் சுவர்களை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Discussion about this post