திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 8-ஆம் நாளான நேற்றிரவு பிச்சாண்டவர் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
அண்ணாமலையாரின் அம்சமான பிச்சாண்டவர், வெள்ளி மேரு வாகனத்தில் ராஜகோபுரத்தின் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மகா தீபாராதனையை தொடர்ந்து பிச்சாண்டவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். அப்போது, கோயில் ஊழியர்கள் வெள்ளி உண்டியல்களை ஏந்தி சென்றனர். அண்ணாமலையாருக்காக சேர்த்து வைத்திருந்த காணிக்கைகளை பக்தர்கள் உண்டியலில் செலுத்தினர். வாணவேடிக்கையுடன் பிச்சாண்டவர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
Discussion about this post