அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் ஏழாம் நாளில் தேரோட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா என்ற கரகோஷத்துடன் அண்ணாமலையார் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இன்று ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசித்து வருகின்றனர்.

Exit mobile version