அண்ணாமலையார் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு விநாயகர் சந்திரசேகரர் தங்க பூத வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத்திருவிழாவின் மூன்றாம் நாள் உற்சவத்தில், விநாயகர் சந்திரசேகரர் தங்க பூத வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருக்கோயிலின் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். மேலும், திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இந்த விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Exit mobile version