திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா, மகா தீபப் கொப்பரை பூஜையுடன் நிறைவடைந்தது.
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கார்த்திகை மகா தீபம் கடந்த 10ஆம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோயில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்களாக காலை 6 மணிக்கு ஒரு முறையும், மாலை 6 மணிக்கு ஒருமுறையும் தீபம் ஏற்றப்பட்டது. மலை மீது மகா தீபம் பிரகாசித்து வந்த நிலையில், நேற்று மலையில் இருந்து மகா தீபக் கொப்பரை கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. மகா தீப கொப்பரைக்கு சாயரட்சை அபிஷேகம் செய்ததை தொடர்ந்து கார்த்திகை தீப திருவிழா நிறைவடைந்தது.
Discussion about this post