கர்நாடகாவில் மழை பொய்த்துள்ளதால், காவிரியில் தண்ணீர் திறப்பு இப்போது இயலாது என்று கர்நாடக பொதுப் பணித்துறை அமைச்சர் ரேவண்ணா கூறியுள்ளார்.
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக பொதுப் பணித்துறை அமைச்சர் ரேவண்ணா ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். தற்போது கர்நாடகாவில் மழை இல்லை என்பதால், காவிரியில் தண்ணீர் திறப்புக்கு சாத்தியமில்லை என்று கர்நாடக பொதுப் பணித்துறை அமைச்சர் ரேவண்ணா கூறினார். கர்நாடகாவில் மழை பெய்தால் தண்ணீர் திறப்பு குறித்து யோசிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
Discussion about this post