கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18 ம் தேதி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள 16எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களில் சிலர் தங்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதனால் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது. மேலும் ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஆளும் கூட்டணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து முயற்சி எடுத்து வரும் நிலையில் அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாஜக தலைவர் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் வரும் 18 ம் தேதி காலை 11 மணிக்கு அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post