கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த, மாநில பாஜக தலைவர்கள் குழு டெல்லி சென்றுள்ளது.
கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, அரவிந்த் லிம்பாவனி, மாதேசாமி ஆகியோர் நேற்றிரவு டெல்லி சென்றனர். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை அவர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
அப்போது முதலமைச்சர் தேர்வு, அமைச்சரவை பட்டியல் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post