உலகப்புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா… குவிந்த பக்தர்கள்

காரைக்காலில் உலகப்புகழ்பெற்ற ஆன்மிக நிகழ்வான மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி இண்று நடைபெற்றது. kஆரைக்காலில் கடந்த ஜூன் 22ஆம் தேதி புனிதவதி அம்மையாருக்கும் பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்று அதைத்தொடர்ந்து இன்று உலகப்புகழ் பெற்ற மாங்கனித் திருவிழா ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கூட்டமாகக் கலந்துகொண்டு மாங்கனி பிடிக்கும் சடங்கில் பங்கேற்றனர். 

புராண வரலாறு: 

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரானகாரைக்காலில் வாழ்ந்த சிவபக்தையான புனிதவதியின் வீட்டிற்கு வந்து மதிய வேளையில், சிவபெருமான், சிவனடியார் வேடத்தில் வந்து உண்பதற்கு அன்னம் வேண்டினார். புனிதவதியும் அன்னத்துடன், தன் கணவர் பரமதத்தன், ஏற்கனவே வாங்கி வைத்திருந்த இரண்டு மாங்கனிகளில் ஒன்றை சிவனடியாருக்கு படைத்தார்.

வீடு திரும்பிய புனிதவதியின் கணவர் பரமதத்தன், தான் வாங்கி வைத்திருந்த இரண்டு மாங்கனிகளில் ஒன்றை வாங்கி புசித்தார். மாங்கனி நன்கு இனிக்கவே, மீதியிருந்த ஒரு மாங்கனியையும் புசிக்க வேண்டி, தன் மனைவி புனிதவதியிடம், அதனையும் எடுத்து வரச்சொன்னார். செய்வதறியாது திகைத்த புனிதவதியார் கண்மூடி இறைவனை வேண்டினார். பழம் ஒன்று அவர் கையில் இருப்பதாக உணர்ந்து விழிக்க, அவர் கையில் உண்மையிலேயே இன்னொரு மாங்கனி இருந்ததாம்.

அவர் இறையன்போடு கேட்டதும்  “கைமருங்கு வந்து இருந்தது அதிமதுரக் கனி ஒன்று” என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் புனிதவதியார் பெருமையை சுட்டுகிறார். 

மாங்கனி இறைத்தல் நிகழ்வு: 

விழாவின்போது பக்தர்கள் தம் பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொள்ளும்பொருட்டு மாங்கனிகளை வீசும்போது விழாவிற்கு வந்திருந்தோர் அவற்றைப் பிடிக்கிறார்கள். பவளக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் தம் கையில் மாம்பழத்துடன் உலா வந்து பக்தர்களுக்குத் தரிசனம் தந்து அவர்களின் அன்பை ஏற்றுக்கொள்வதாக பக்தர்களால் கருதப்படுகிறது.

 

Exit mobile version