புதுச்சேரியில் காரைக்கால் அம்மையார் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் மாங்கனி விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சனிக்கிழமை மாலை ஆற்றங்கரை சித்திவிநாயகர் ஆலயத்தில் விக்னேஷ்வர பூஜை மற்றும் மாப்பிள்ளை அழைப்புடன் விழா தொடங்கியது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதமாக மாம்பழங்கள் வழங்கப்பட்டன. பக்தர்கள் பாதுகாப்பிற்காக ஏராளாமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post