கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘காப்பான்’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லைகா தயாரிப்பில் மற்றும் கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காப்பான்’ படத்தில் சூர்யா, சாயிஷா நடித்துள்ளனர். இப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர், தன்னிடம் கேட்ட கதையை படமாக கே.வி ஆனந்த் எடுத்திருப்பதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காப்பான் படத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த உத்தரவை மறுத்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் தன் தரப்பு கருத்துக்களை கேட்காமல் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும், காப்பான் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.