காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற பூதத்தாழ்வார் சாத்துமுறை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வாரின் பிறந்த நட்சத்திரத்தை ஒட்டி, இன்று பூதத்தாழ்வார் சாத்துமுறை உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உற்சவ மூர்த்திகள் முன்பு தென்கலை ஐயங்கார்கள் பிரபந்தங்களை பாட முயற்சித்தனர். அப்போது அவர்களைத் தடுத்த வடகலை ஐயங்கார்கள் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி பிரபந்தங்களை பாடக்கூடாது என வாய் தகராறில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சச்சரவையடுத்து, இருதரப்பினரும் பிரபந்தம் பாடவேண்டாம் என காவல் துறை, இந்து அறநிலையத் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பிரபந்தம் பாடுவது தொடர்பாக வடகலை, தென்கலை ஐயங்கார்களுக்கிடையே ஏற்பட்டுவரும் தொடர் மோதல்களால் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
Discussion about this post