காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவத்தின் 8ம் நாளான இன்று இளஞ்சிவப்பு நிற பட்டுடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்றைக்கு மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் தரிசனம் செய்ததாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. வழக்கம் போல் இன்று காலை 5 மணியளவில் கோயிலின் நடை திறக்கப்பட்டு அத்திவரதர், பொதுமக்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். 48 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் உற்சவத்தின் எட்டாம் நாளில் அத்திவரதர் இளஞ்சிவப்பு பட்டும் உடுத்தி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
தினமும் எதிர்பாராத வகையில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை தரிசனம் தரும் அத்திவரதரை காண சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஆவலுடன் கண்டு வருகின்றனர்.
Discussion about this post