காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் வைபவ மூன்றாம் நாளான இன்று பச்சை நிற அலங்காரத்துடன் காட்சியளித்த ஆதி அத்தி வரதரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ சுவாமிகள் திருக்கோயிலில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகப் பிரசித்தி பெற்ற ஆதி அத்தி வரதர் வைபவம் கடந்த ஒன்றாம் தேதி முதல் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், முதல் நாள் தரிசித்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று 75 ஆயிரம் பக்தர்களும், மூன்றாம் நாளான இன்றும் பச்சை நிற அலங்காரத்துடன் காட்சி அளித்த ஆதி அத்தி வரதரை பல ஆயிரக்கணக்கான பக்தர்களும் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
விழாவில், நெல்லையிலிருந்து ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் ரங்க ராமானுஜ ஜீயர், ஆதி அத்தி வரதரை தரிசனம் செய்தார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விரிவாக செய்துள்ளது.
Discussion about this post