1973ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்ற காஞ்சன் சவுத்திரி 2004ஆம் ஆண்டு உத்தரக்கண்ட் மாநிலத்தின் காவல்துறைத் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்தியாவிலேயே காவல்துறைத் தலைமை இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் என்கிற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். ஓய்வுக்குப் பின் அரசியலில் ஈடுபாடு கொண்ட காஞ்சன் சவுத்திரி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அரித்துவார் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். மும்பையில் உள்ள வீட்டில் இருந்த அவர் திடீர் உடல்நலக் குறைவால் நேற்றுக் காலமானார். அவரது மறைவுக்கு ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கேஜ்ரிவால் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Discussion about this post