உத்தரப்பிரதேசம் லக்னோவில் சுட்டுக்கொல்லப்பட்ட கமலேஷ் திவாரியின் குடும்பத்தினர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
லக்னோவில் குர்சித்பாக் என்னுமிடத்தில் இந்து அமைப்பின் தலைவரான கமலேஷ் திவாரியின் அலுவலகத்துக்குச் சென்ற மர்ம நபர்கள் அவரைத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். குஜராத்தின் சூரத்தில் கைது செய்யப்பட்ட மூவரை லக்னோவுக்கு அழைத்து வந்து விசாரிக்க உள்ளனர். இந்நிலையில், கமலேஷ் திவாரியின் குடும்பத்தினர் இன்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்துப் பேசினர். அப்போது தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்தார்.
Discussion about this post