கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் அதிவேக அணு உலை அடுத்த இரண்டு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் அருண்குமார் பாதூரி தெரிவித்தார்.
சென்னை பல்கலைகழகத்தில் 161வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் அருண்குமார் பாதூரி, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் முழுவதும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு வரும் அதிவேக அணு உலை அடுத்த இரண்டு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவித்தார்.
இதன்மூலம் சாதாரண அணு உலையை விட 70 சதவீதத்திற்கு அதிக மின் சக்தியை உற்பத்தி செய்ய முடியும் எனவும் அவர் கூறினார். மேலும் கூடுதலாக 500 மெகாவாட்மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இப்புதிய அணு உலை காற்றில் கார்பன் கலப்பு 15 சதவீதம் குறைக்கப்படும் எனவும் நிலக்கரி பயன்பாடும் 25 சதவீதம் குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post