கல்லணையிலிருந்து கடந்த 17-ம் தேதி திறந்துவிடப்பட்ட நீரானது இன்று தஞ்சை வந்தடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டூரிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு சம்பா சாகுபடி பணிகளுக்கு, தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்தால் தான் கடைமடைக்கு தண்ணீர் வரும் என விவசாயிகளின் கோரிக்கை விடுத்தனர்.
தற்போது, கல்லணையில் இருந்து காவிரியில் 2ஆயிரத்து 632 கன அடியும், வெண்ணாற்றில் 2ஆயிரத்து 333 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Discussion about this post