2022-ல் செயற்கைகோள் மூலம், இந்தியர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியிருந்தார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், பிரதமர் மோடி வழங்கிய மிகச்சிறந்த பரிசுதான் ககன்யான் திட்டம் என்று குறிப்பிட்டார். இளம் தலைமுறையினருக்கு உந்து சக்தியாகவும், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தளத்தை மிகப்பெரிய அளவிற்கு கொண்டுசெல்லு திட்டமாகவும் இது இருக்கும் என்று அவர் கூறினார். ககன்யான் திட்டத்திற்கான பணிகள் 70 சதவீதம் முடிவடைந்து விட்டதாக குறிப்பிட்டார். 2022-ம் ஆண்டுக்குள் இந்த சாதனையை எட்டிப்பிடிப்பது இஸ்ரோவுக்கு மிகப்பெரிய சவால் என்றும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, 2 ஆளில்லா விண்கலன்கள ஜி.எஸ்.எல்.வி. மார்க்- 3 ராக்கெட் மூலம் செலுத்தி சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சிவன் தெரிவித்தார்.
Discussion about this post